புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டமான “போஷன் மா” என்ற திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முழுவதும் அந்தந்த அங்கன்வாடி மையங்களில் சத்தான உணவுகள் பற்றியும் இயற்கையான உணவுகள் பற்றியும் காய்கறிகளின் மகத்துவம் குறித்தும் பொது மக்களுக்கு புரியும் வண்ணம் அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடிகள் மூலம் எடுத்துரைக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர் நிகழ்வாக பதினொன்றாம் நாளாக காரைக்காலில் அமைந்துள்ள அக்கம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் கொண்டாடப்பட்டன. இந்நிகழ்வில் இயற்கை உணவுகள் குறித்து குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அதிகாரி திருமதி. காஞ்சனா அவர்கள் அங்கு கூடியுருந்த பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்கள்.
மேலும் இந்நிகழ்வில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கான தேர்வு நடைபெற்றன. இந்நிகழ்வில் டாக்டர் லாவண்யா அவர்கள் மூலம் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் ஆகிய பரிசீலிக்கப்பட்டு இதில் சிறந்த குழந்தைகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன,
இந்நிகழ்வில் பல்வேறு பகுதியை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.