புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 – ஆம் தேதியன்று நடைபெறும் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து காரைக்கால் மாவட்டத்தில் 27 முதல் 29.9.24 வரை மூன்று நாட்கள் விழாவை சிறப்பாக நடத்த மாவட்ட ஆட்சியர் முனைவர் திரு. மணிகண்டன் இ ஆ ப அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் அவர்கள் கூறுகையில் பொதுமக்களை கவரும் வண்ணம் சுற்றுலா தளங்களை தூய்மைப்படுத்துதல், கபடி போட்டி, வாலிபால் போட்டி, படகு போட்டி, மினி மாரத்தான் போட்டி, இன்னிசை கச்சேரி, புகைப்பட கண்காட்சி, ஹேப்பி ஸ்ட்ரீட் ஷோ உள்ளிட்ட போட்டிகள் நடத்த ஆலோசிக்கப்பட்டன. நிகழ்வில் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சுத்தமான குடிநீர் வழங்குதல், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள். போன்றவைகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தருமாறு ஆட்சியர் அவர்கள் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் சுற்றுலாத்துறை கலை பண்பாட்டுத்துறை உடன் இணைந்து நிகழ்வை சிறப்பாக நடத்துமாறு ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். இந்நிகழ்வில் துணை மாவட்ட ஆட்சியர்கள் திரு. ஜான்சன் மற்றும் திரு. செந்தில்நாதன் ஆட்சியரின் செயலர் திரு. பொன் பாஸ்கர் காவல் கண்காணிப்பாளர் திரு. சுப்பிரமணியன் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் திரு. சிதம்பரநாதன் செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குனர் திரு, குலசேகரன் முதன்மை கல்வி அதிகாரி திருமதி. விஜய மோகனா மின்துறை தலைமை பொறியாளர் திருமதி. அனுராதா நகராட்சி ஆணையர் திருமதி சத்யா சுற்றுலாத்துறை அதிகாரி திரு. பரசுராமன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தார்கள்.