புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முதியோர்கள், விதவைகள், முதிர்கன்னிகள்,திருநங்கைகள் ஆகியோருக்கு பென்ஷன் உதவித்தொகை விண்ணப்பங்கள் செய்த பயனாளிகளுக்கு புதுவை மாநிலம் திமுக துணை
அமைப்பாளரும் , உப்பளம் தொகுதி சட்டமன்ற
உறுப்பினருமான _வி. அனிபால் கென்னடி அவர்கள் பயனாளி பயன் பெரும் வகையில் உதவி தொகை பெறுவதற்கான அட்டை வழங்குதல் சம்மந்தமாக இயக்குனர் முத்துமீனா , துணை இயக்குனர் அமுதா , பாலமுருகன் ஆகியோரை நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
வரும் வாரங்களில் விண்ணப்பித்த பயனாளிகள் அனைவருக்கும் உதவி தொகை பெறுவதற்கான அட்டை வழங்குதல் நிகழ்ச்சி செய்துவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. உடன் திமுக தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.