V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி
பண்ருட்டி செந்தமிழ் சங்கத்தின் 144- வது மாத அமர்வு மற்றும் ஆசிரியர் தினம் கவியரங்கம் பாராட்டரங்கம் எனும் முப்பெரும்விழா எஸ்- வி திருமண மண்டபத்தில் கௌரவ தலைவர் ப-ச- வைரக்கண்ணு தலைமையில் நடைபெற்றது .
கவிஞர் முருக. சிவானந்தம், செல்வன், ஸ்ரீ பிரசன்ன, சிவா, ஸ்ரீ காந்த் சிவா ஆகியோரின் தமிழ் வாழ்த்து பாடலோடு தொடங்கியது.
விழாவில் செயலாளர் சொ. முத்துக்குமார் கு. முத்துக்குமரப்பன், ஜே.ஏ. அசோக்ராஜ், செந்தில்குமார், அக்ஷாயா செந்தில்குமார்,ஐல்லு ராஜவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் ராம.சுதாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். காப்பாளர் எஸ் சந்தானம் ஐயங்கார் மகிழ்வரை நிறுத்தினார்.
தலைவர் சுந்தர பழனியப்பன் தொடக்கவுரை நிகழ்த்தினார். விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான எஸ். சுப்பிரமணியன் ஆர். சாமிநாதன் தங்க. சுப்பிரமணியன் என். முருகதாஸ் ஆர். ராஜா ஆர். பாண்டுரங்கன் மற்றும் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பாலபோத பவனம் பள்ளியின் ஆசிரியை டி. தமிழ்மணி ஜான்டூயி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் பேரரசி, ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். கனகராஜ் தமிழரசி மழலையர் பள்ளியின் ஆசிரியை ஜலஜாரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இவர் அனைவருக்கும் பண்ருட்டி செந்தமிழ் சங்கத்தின் சார்பில் சீர்மிகு நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்வில் இனி ஒரு சுதந்திரம் எனும் தலைப்பில் கவிஞர் கோவி.மகாவிஷ்ணு தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.ச. நடராஜன் கீதாலட்சுமி முருகன் கவிஞர் குமாரியோகேஷ் சிவ.வைத்தியநாதன் , நாகலட்சுமி, ராமலிங்கம், , பத்மபாரதி, கோபிநாத், தீபக் ராஜ் , ஆகியோர் கவிதை வாசித்தனர் விழாவில் உரையரங்கம் கவிஞர் தங்கவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகம் மாணவி செல்வி சுமத்திரா ஜான்வி கல்லூரி மாணவி செல்வி ஜோதிகா, ஜான்று பள்ளி மாணவி காவியா,பிரனிதா சாய், பாலபோத பவனம் பள்ளி மாணவன் அகிலன் முத்தையர் பள்ளி மாணவி லோகஸ்ரீ தமிழரசி பள்ளி மாணவி சஹானா ஆகியோர் உரை நிகழ்த்தி ஆசிரியர் தின விழா குறித்து உரை நிகழ்த்தினர் விழாவில் ஒருங்கிணைப்பாளர் அரங்க. கிருஷ்ணன் நன்றி கூறினார்.