தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூா்,
தி.மு.க. உயர்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று கட்சியை காத்த தீரர்களுக்கு ஆண்டுதோறும் பெரியார், அண்ணா, கருணாநிதி, பாரதிதாசன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது தி.மு.க. 75-வது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் இந்நேரத்தில் கட்சியை 6-வது முறையாக ஆட்சியில் அமர வைத்து இந்தியாவே போற்றி வரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க. தலைவர் மு. க ஸ்டாலின் பெயரில் இந்த ஆண்டு முதல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.எஸ். பழநிமாணிக்கத்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது சென்னையில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ள தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் நேற்று தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள எஸ்.எஸ். பழநிமாணிக்கம் வீட்டில் தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்து நிர்வாகிகள் நேரில் சந்தித்து மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் எம். பி முரசொலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., களிமேடு து.செல்வம், தாட்கோ தலைவரும் முன்னாள் அமைச்சருமான உ.மதிவாணன், மாவட்ட அவைத் தலைவர் சி.இறைவன், மாவட்ட துணை செயலாளர்கள் என்ஜினீயர் எஸ்.என்.மணிமாறன், புண்ணியமூர்த்தி, கனகவல்லி பாலாஜி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். இராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர்கள் தஞ்சாவூர் வைஜெயந்திமாலா கேசவன், ஒரத்தநாடு பார்வதி சிவசங்கரன், பூதலூர் செல்லக்கண்ணு, திருவையாறு அரசாபகரன், ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வகுமார், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன், பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், மேத்தா, நீலகண்டன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகில்வேந்தன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மணவழகன் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் முருகையன் வல்லம் நகர செயலாளர் கல்யாணசுந்தரம், மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழ்வாணன், எஸ்.ஆர்.எஸ்.செந்தமிழ்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.