தீபாவளிக்கு மும்பை – தென்தமிழகம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் மற்றும் மும்பை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலை (தர்மாவரம், ஹிந்தாப்பூர், கிருஷ்ண ராஜபுரம் வழியாக வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைத்து அதிவிரைவு ரயிலாக மாற்றி இயக்க வேண்டும் என கராத்தே முருகன் மற்றும் மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் ஆகியோர் மத்திய ரயில்வே தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் குஷால் சிங் மற்றும் தலைமை இயக்க மேலாளர் ஷியாம் சுந்தர் குப்தா வின் பொறுப்பாளர்களை சந்தித்து கடந்த வாரம் செப்டம்பர் 3ஆம் தேதி கேப்டன் ஆர்.தமிழ் செல்வன் எம் எல் ஏ மற்றும் மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் ஆகியோர் கூடுதல் பொதுமேலாளர் பிரபாத் ரஞ்சனிடம் அளித்த மனுவின் அடுத்தகட்டப்பணிகள் குறித்து விசாரித்தார்கள்.

அந்த மனுவில் கேரளா சிறப்பு ரயில் எண்: 22113 எல் டி டி – கொச்சுவேலியை நாகர்கோயில் வழியாக நெல்லை வரை நீடிக்க வேண்டும். ரயில் எண்: 16339 மும்பை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (தர்மாவரம், ஹிந்தாப்பூர், கிருஷ்ண ராஜபுரம் வழி) 4 மாநில வழியாக செல்கிறது. மும்பையில் 80 – 90 லட்ச தென்னிந்திய மக்கள் வாழ்கிறார்கள் இதில் தமிழர்கள் மட்டுமே 25 லட்ச மக்களுக்கு மேல் மும்பையில் வாழ்கிறார்கள் பொதுமக்கள் நலன் கருதி இந்த ரயிலை தினசரி இயக்க வேண்டும் மேலும் 8:30 மணிக்கு புறப்படும் நேரத்தை மாற்றி காலை 8 மணிக்கு இயக்க வேண்டும்.

ரயில் எண்: 12619 & 12133 மும்பை – மங்களூரு ரெயிலை ராமேசுவரம் வரை (வழி பாலக்காடு ,பொள்ளாச்சி, பழனி, மதுரை நீட்டித்து) வாரத்தில் 4 நாட்களுக்கும், மற்ற 3 நாட்கள் நெல்லை /தூத்துக்குடி வரையும் நீட்டித்து இயக்க வேண்டும். நெல்லை /தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும் ரெயில் கொல்லம், செங்கோட்டை, தென்காசி, அம்பை, சேரன்மகாதேவி வழியாக இயக்கப்பட வேண்டும், ரயில் எண்: 11301 மும்பை – பெங்களூரு உதயன் எக்ஸ்பிரஸ் சேலம் வரை நீடிக்க வேண்டும்
ரயில் எண்: 22159 மும்பை – சென்னை ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். மும்பை – சென்னை வழித்தடத்தில் வந்தேபாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும். மும்பை -தமிழ்நாட்டுக்கு ராஜதானி, ஹம்சபார், கரிப்ரத் போன்ற ரயில்களை இயக்க வேண்டும்.

தீபாவளிக்கு மும்பை – தென்தமிழகம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும், ரயில் எண் 11021 தாதர் – நெல்லை சாளுக்கியா எஸ்பிரெஸ்யை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாவூர்ச்சத்திரம், தென்காசி, செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும்; ரயில் எண்: 16381 மும்பை -கன்னியாகுமரி ரயிலை பழைய வழித்தடத்தில் கன்னியாகுமரி -புனே க்கு பதிலாக மும்பை வரை இயக்க வேண்டும் , ரயில் எண்: 01143 மும்பை தூத்துக்குடி ரயிலை மறுபடியும் இயக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் மத்திய ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் வழங்கி உள்ளனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வரும் வாரங்களில் மேற்கு ரயில்வே வழித்தடத்தில் முதன்முதலாக செல்கிற பாந்த்ரா கோவா இடையிலான ரயிலை
கொங்கன் வழியாக மங்களூர் கொல்லம் புனலூர் செங்கோட்டை தென்காசி அம்பை வழியாக நெல்லை தூத்துக்குடி வரை இயக்க கோரிக்கையை ரயில்வே அதிகாரிகளிடம் வைக்க திட்டமிட்டுள்ளோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *