நாமக்கல் மாவட்டம்
பரமத்தி வேலூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு வருகை தந்தார் . தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

60 அடி உயர கொடிக்கம்பத்தில் கழக இரு வண்ணக் கொடி ஏற்றுதல் கழக தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தல் கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் இரண்டு அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது இரண்டு அமைச்சர்களின் வருகையை ஒட்டி பரமத்தியிலிருந்து வேலூர் வரை நகரமே திருவிழாவாக காட்சி அளித்தது நகரம் முழுவதும் இரு வண்ண கொடிகள் வழிநெடுகிலும் அதிக அளவில் கட்டப்பட்டிருந்தது பரமத்தி வேலூர் பைபாஸ் சாலையில் உள்ள 60 அடி உயர கொடி கம்பத்தில் கழக இரு வண்ண கொடியை ஏற்றினார்

இதனைத் தொடர்ந்து வேலூரில் உள்ள கலைஞர் அரங்கம் திறந்து வைத்து அரங்கத்தில் உள்ள நூலகத்தையும் திறந்து வைத்து மற்றும் இ சேவை மையத்தையும் திறந்து வைத்தார் அதன் பின்னர் கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்,

பேருரை ஆற்றினார் அப்போது அவர் தெரிவிக்கையில் 2026 சட்டமன்ற தேர்தலில் நமது இலக்காக 200 தொகுதிகளை வென்று காட்ட வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று செயல்பட வேண்டும் ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்று செயல்பட்டால் தான் அத்தனை தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெறும். நமது நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் இவ்வளவு பெரிய தொகுதி கழக கட்டடத்தை எழுப்ப முடிந்தது நமது கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவுப்படி நாம் இங்கு இந்த நூலகத்தை திறந்து வைத்துள்ளோம்.

உள்ளபடியே இந்த கட்டிடத்தை திறந்து வைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்று இருந்தாலும் இங்கு இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சராக அவர்கள் திறம்பட செய்து வருகிறார்கள். இன்று காலையிலிருந்து காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களை சந்தித்தேன் ஆசிரியர்களை சந்தித்தேன் நாமக்கல் மாவட்டம் ஒரு வளர்ச்சி சிறந்த மாவட்டம் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் தமிழக முதலமைச்சரின் திட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
திமுக துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ், சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி மேற்கு மாவட்ட ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர், பேரூர் கழக செயலாளர், தொண்டரணி சார்பு அணிகள் மகளிர் அணி மற்றும் ஏராளமான கழக தொண்டர்கள் பொதுமக்கள் என முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *