விருதுநகர் மாவட்டம்.ராஜபாளையத்தில் விருதுநகர் மண்டல நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, மலையடிப்பட்டி சவுந்திரபாண்டியன் நகரில் திலீபன் நினைவு கொடிக் கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கு தயாராவது மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்த ஆய்வு செய்வதற்காக கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த 36 லட்சம் பேரில் புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர். எங்களது கருத்தியலை மையமாக கொண்டே வாக்காளர்கள் உள்ளனர்.
சாதி, மதம், சாராயம், பணம், திரைக்கவர்ச்சி ஆகியவை நல்ல அரசியலை முன்னெடுக்க தடையாக உள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்தவர்களுக்கு மட்டும் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு சின்னம் ஒதுக்க வில்லை.
விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதில் எனக்கு ஐயமில்லை. மாநாட்டுக்கு அதிமுகவை விசிக அழைப்பதை வரவேற்கிறேன். ஆனால் பாஜக மதவாத கட்சி, பாமக ஜாதி கட்சி என்கிற திருமாவளவன்,
மதுவாத.கட்சியான. திமுகவுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்?
தமிழகம் முழுவதும் உள்ள யாதவ சமூகத்திற்கு, சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இரு அமைச்சர் பொறுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு மட்டும் இரு அமைச்சர் பதவி வைத்துள்ளது என்ன சமூக நீதி. சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது.
பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். வேளாண் சார்ந்த தொழில்களை உருவாக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களே விலையை தீர்மானித்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கியதால் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
ஜாதி வாரி கணக்கெடுப்பு பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது. மத்திய அரசு தான் ஜாதிவாரி கண்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை.
இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல உரிமை. சாதி வாரி கணக்கெடுப்பு, மது ஒழிப்பு கொண்டு வருபவர்கள் உடன் மட்டுமே கூட்டணி வைக்க முடியும் என ராமதாஸ், திருமாவளவன் அறிவிக்க தயாரா. மது விலக்கு மாநாடு நடத்துவது காலம் கடந்த முடிவு, இவ்வாறு அவர் கூறினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் மதிமாறன், மண்டல செயலாளர் ஜெயராஜ், கொள்கை பரப்பு செயலாளர்கள் அருண் ஜெயசீலன், ஜெயசுந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.