திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் வலங்கைமான் தொழுவூர் அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் லியோ சங்க துவக்க விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் முரளி தலைமை வகித்தார், மாவட்ட ஆளுநர் சவரி ராஜ் புதிய லியோ சங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
லியோ சங்கங்கள் மாவட்ட தலைவர் செந்தில்குமார் பொறுப்பாளர்களை பணியில் அமர்த்தினார். எம் ஜே எஃப் லயன் மண்டல தலைவர் சங்கர லட்சுமி காளிதாஸ் உறுப்பினர்களை லியோ சங்கத்தில் இணைத்து சிறப்புரை ஆற்றினார்.
எம் ஜே எஃப் லயன் வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் லியோ சங்க பொறுப்பாளர்கள் தலைவர் சிவப்பிரகாஷ், செயலாளர் பவித்ரன், பொருளாளர் அபிஷேக், குடந்தை சிட்டி லயன்ஸ் சங்க செயலாளர் மணி, கல்லூரியின்முதல்வரும், குடந்தை சிட்டி லயன்ஸ் சங்க பொருளாளருமான ஜான் லூயிஸ்,லியோ அட்வைசர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.