அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் அண்ணா சிலை, அருகில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கிரேடு 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி, ஊழியர்களுக்கு ரூ.26,000, உதவியாளர்களுக்கு ரூ.21,000 சம்பளம் வழங்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடைத் தொகை ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து அங்கன்வாடி பணியாளர்களையும் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும். மே மாதம் முழுவதும் விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட பொருளார் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கிரேடு 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி, ஊழியர்களுக்கு ரூ.26,000, உதவியாளர்களுக்கு ரூ.21,000 சம்பளம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடைத் தொகை ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து அங்கன்வாடி பணியாளர்களையும் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும். மே மாதம் முழுவதும் விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட பொருளார் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார்.