வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் வாழைத்தார்கள் கொள்முதல்
அலங்காநல்லூர், செப்.15-
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 2023-24 ஆம் ஆண்டு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மூலம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் உள்ள குட்டிமேய்க்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி துரைச்சாமி தோட்டத்திலிருந்து 500 வாழைத்தார்கள் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே மதுரை மாவட்டத்தில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் வாழைத்தாரினை நல்ல விலைக்கு விற்பனை செய்திட அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் வேளாண்மை அலுவலர்கள் சித்தார்த், மீனா, உதவி வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரன், பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ராஜபாண்டி, நிறுவனத்தின் இயக்குனர்கள் தனிராஜன், தங்கராசு, அனுமதிபாண்டி, மயில்வாகனன் தேசிய வேளாண் அமைப்பைச் சேர்ந்த முருகன், மற்றும் அருள், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்
தனிராஜன், நன்றி கூறினார்..