தமிழ்நாடு ஊரக ஊராட்சி செயலாளர்கள் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம்
மாநிலத் தலைவர் தகவல் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தில் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அதன் விபரம் தமிழ்நாட்டில் 12525 கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்கள் 2018 ஆம் ஆண்டு முதல் முறையான கால முறை ஊதியம் ரூபாய் 15900 -50490. என சி கிரேடு பணியாளர்கள் ஊதியம் பெற்று வந்தாலும் ஊராட்சி செயலாளர்கள் பணி ஓய்வு பெறும் பொழுது ரூபாய் 2000 ஓய்வூதியம் மட்டுமே மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது
இந்த ஓய்வூதியம் என்பது சிறப்பு கால முறை ஊதியக் கூட்டில் பணியாற்றி வரும் பகுதிநேர பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ஆகும் ஊராட்சி செயலாளர்கள் பொருத்தமட்டில் நிலையான கால முறை ஊதியத்தில் பணியாற்றும் ஒரு முழு நேர பணியாளர் ஆவர் இந்த நிலையில் ஊராட்சி செயலர்கள் தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்திட வேண்டுமென்று கூறி கிடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மாநில அளவில் தொடர் விடுப்பு எடுத்து 8 நாட்கள் சென்னையில் போராட்டம் நடத்தினார்கள் அரசு ரூபாய் 8 கோடி வரை ஊதிய பிடி த்தம் செய்தது இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் ஆகியோர் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி மிக விரைவாக உரிய அரசாணை வெளியிடப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது
ஆனால் போராட்டம் ஒத்திவைத்து 10 நாட்கள் கடந்த பிறகும் அரசாணை இதுவரை வெளியிடவில்லை இதனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஊராட்சி செயலாளர்கள் வெகுவாக பாதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது எனவே ஒத்திவைத்த போராட்டத்தை வேண்டும் அடுத்த மாதம் பிப்ரவரி 9ஆம் தேதி மாநில அளவில் போராட்டம் தொடங்குவது என்றும் இந்த மாநில அளவிலான வேலை நிறுத்த போராட்டம் சென்னையில் 10,000 மேற்பட்டோர் பங்கேற்போடு தொடர்ச்சியாக அரசாணை வெளிவரும் வரை இடைவிடாமல் தொடர்ந்து நடக்கும் தமிழ்நாடு அரசு ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்திட வேண்டும் மற்றும் ஏற்கனவே ஓய்வு பெற்று உள்ள ஊராட்சி செயலாளர்களுக்கும் மாதம் ரூபாய் 15,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய ஐந்து கோரிக்கைகள் அரசாணை வடிவில் பெறும் வரை எங்களது தொடர் போராட்டம் நடக்கும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.