செங்குன்றம் செய்தியாளர்

திருவள்ளூர் மாவட்டம், தவெக சார்பில் மாதவரம் பஜார் மண்டல அலுவலகம் அருகில் தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தவெக மாவட்ட செயலாளர் எம் .எல்.விஜய் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாதவரம் வார்டு 28 ல் இலவச பட்டா வழங்கிடவும், மூடப்பட்ட ஆதிதிராவிடர் பள்ளியை திறக்க கோரியும் , ஆக்கிரமிப்பு குளத்தை மீட்டு தரவும், சேதமடைந்த மின் கம்பிகளை அகற்றிடவும் , மழைநீர் கால்வாய் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும், குடிநீர், கழிவுநீர் குழாய்களை 100 ரூபாய் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் எனவும் அரசை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர் மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் விஜய் மூர்த்தி உட்பட கட்சியின் நிர்வாகிகள் , தொண்டர்கள் ஆண்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டு கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *