விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பாக்கம் கூட்ரோட்டில் பேரறிஞர் அண்ணா 116-வதுபிறந்தநாள்விழா பொதுக்கூட்டம்
மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவிழா நடந்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி வானூர் சட்டமன்ற தொகுதி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116- வது பிறந்தநாள்விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவிழா கோண்டூர் கூட்ரோடு எம்ஜிஆர் திடலில் நடந்தது மாவட்டகழக செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி. வீ. சண்முகம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே ராமதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்கே கண்ணன் வானூர் ஒன்றிய செயலாளர் கராத்தே பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலங்களவை உறுப்பினர் சி வி சண்முகம் பேசும்பொழுது திமுக கட்சி என்பது கோபாலபுரத்து குடும்பத்தின் கட்சியாக தான் செயல்பட்டுக் கொண்டு வருகிறது ஆனால் அதிமுக என்பது எளிய பாமர மக்களும் உயர் பதவிகளுக்கு வர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டக்கூடிய கட்சியாக உள்ளது வாரிசு குடும்ப அரசியல் என்பது அதிமுகவில் கிடையாது

கருணாநிதி அவருக்கு பின் அவருடைய மகன் ஸ்டாலின் இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இப்படி பாரம்பரிய பாரம்பரியமாக திமுகவில் குடும்ப அரசியல் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை கூட்டு பாலியல் பலாத்காரங்கள் கொலை கொள்ளை கஞ்சா புழக்கம் தலைவிரித்தாடுகிறது

சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற அறிவிப்பு தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 24 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட வேண்டும் ஆனால் அவ்வாறு வழங்கவில்லை இன்னும் ஒரு கோடியே 24 லட்சம் மக்களுக்கு பணம் வழங்கப்படாமல் தவிக்கப்படப்பட்டுள்ளனர்

பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று அறிவித்துவிட்டு அதற்கான தொகையை மற்ற பயணிகள் தலையில் சுமக்க வைப்பது தான் திமுக ஆட்சியில் இலட்சணம் இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பேசினார் பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சிவி சண்முகம் வழங்கினார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *