தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் வார்டு பொறுப்பாளர்கள் ஏராளமானோ் கலந்து கொண்டனர்..
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றது..
இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதி வார்டு பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மைல் கல் பகுதியில் நடைபெற்றது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சம்பத்,மற்றும் செயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினார்.
குனியமுத்தூர் பகுதி கழக தலைவர் பைசல் ஏற்பாட்டில் நடைபெற்ற இதில் கவுரவ அழைப்பாளராக இந்தியன் வுட் ஒர்க்ஸ் குப்புராஜ் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் குனியமுத்தூர் பகுதிக்கு உட்பட்ட ஏழு வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் சம்பத் பேசுகையில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்வதற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து பொறுப்பாளர்களிடம் பேசினார்.
தொடர்ந்து அவர்,
மாநாட்டில், போலீசார் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நடப்பது,மற்றும் பொறுப்புடன் நடந்து கொள்வது குறித்து அறிவுரை வழங்கினார்..
தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் படி நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொருவரும் வரும் சட்டமன்ற தேர்தலை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் வெற்றிக்கு பணியாற்றுவதற்கு தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் இறுதியாக இரும்பு கடை அக்கீம் நன்றியுரை வழங்கினார்..