வாடிப்பட்டி
வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் தனியார் மஹாலில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளர் ராஜலட்சுமி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர்கள் வெற்றிவேல், வக்கீல் திருப்பதி, வாடிப்பட்டி ராஜேஷ்கண்ணா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான
ஆர்.பி.உதயகுமார், கலந்துகொண்டு கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்களை எடுத்துக் கூறினார்.
வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக அரியணை ஏறுவார் அதற்கு நாம் இப்போதே தயாராகி விட்டோம் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மு.கா.மணிமாறன் தீர்மான நகலை வாசித்தார்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், எஸ்.எஸ்.சரவணன், ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெயச்சந்திரமணியன், மாவட்ட மகளிரணி செயலாளர் வக்கீல் லெட்சுமி, துணைச் செயலாளர் மருதாயி, கவுன்சிலர் வனிதாகட்டத்தேவன், மகளிரணி சாந்தி, மற்றும் வாடிப்பட்டி நிர்வாகிகள் சந்திரபோஸ், திவ்யா, அழகு, மலைக்கண்ணன், செந்தில், மூர்த்தி, குழந்தைவேலன், பிச்சை, உமையாண்டி, தங்கையா, சசி, ரமேஷ், அழகுராஜா, சங்கர் குமார், ஜெயராமன், மிட்டாய் கார்த்திக், பெரியசாமி, தர்மர், முருகன், பிரசன்னா, அழகர், மாலிக், சுப்புராஜ், ஜெயச்சந்திரன், வசந்தகுமார், பாலன், நாகமணி மலைச்சாமி, பாண்டியன், பிரசன்னா, பாண்டி, அழகர், ஜெயக்குமார், மலைச்சாமி, முருகன், தர்மர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டைமேடு பாலன், நன்றி தெரிவித்தார்