அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை ஆணைக்கிணங்க தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஈஸ்வரன், ராஜ்குமார், பெத்துராஜா, கோட்டைசாமி, கண்ணன், விக்கி, நாகார்ஜுன், நந்தகுமார் பிரபாகரன், செல்லப்பாண்டி, பால்பாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ராஜ்குமார், நன்றி கூறினார்..