அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு பேருந்து நிலையம் பகுதியில் இளைஞரணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர்கள் துணை முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து திமுக சார்பாக வடக்கு மாவட்ட அவைத் தலைவர் தலைவர்
பாலசுப்பிரமணியன், தலைமையிலும் ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பரந்தாமன், ஆகியோர் முன்னிலையில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகரச் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், ஆதிதிராவிடர் அணி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு துணை தலைவர் சங்கீதா, மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் தண்டலை சரவணன், ஒன்றிய துணை செயலாளர்கள் அருண்குமார், வலசை ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன், போக்குவரத்து தொழிற்சங்க கௌரவத் தலைவர் பெரியசாமி, தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் வாவிடமருதூர் கார்த்திகேயன், முடுவார்பட்டி சேகர், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தவசதீஷ், பொறியாளர் அணி ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..