திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட வளையமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(48) இவர், வலங்கைமான் அருகே உள்ள நல்லம்பூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (46) என்பவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணம் கடனாக பெற்றுள்ளார். அந்தப் பணத்தை திரும்ப கேட்டதால் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

இதில் சரவணனின் இருசக்கர வாகனத்தின் சீட்டினை பாஸ்கர் கிழித்துவிட்டார். இதை அடுத்து நேற்று சரவணன் பணம் கொடுத்த பாஸ்கரிடம் கத்தியுடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாஸ்கர் விவசாயி சரவணனை அரிவாளால் வெட்டியாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சரவணன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *