தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை ஆகிய இரு துறைகளும் இணைந்து நடத்தும் தென்றல் தவழும் சுருளி அருவி சாரல் திருவிழா மூன்றாம் நாள் பள்ளி மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியை சாரல் விழாவிற்கு வருகை புரிந்த பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு களித்து மகிழ்ந்தனர்.இந்த நிகிழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்