சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை 07.05.2024 முதல் 30.09.2024 வரை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது. எனவே, கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ‘epass.tnega.org” என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்று பயணிக்கலாம்.