தர்மபுரி ஜில்லா காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பேகராஅள்ளி பஞ்சாயத்து சுன்னாம்பட்டி கிராமத்தில் “” தர்ம பிரஸார்”” சார்பாக தையல் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட இணை செயலாளர் திரு ரமேஷ் பிரபுஜி , மற்றும் மாவட்ட அமைப்பு செயலாளர் திரு முரளி ஜி பூஜை செய்து தொடக்கி வைத்தார்கள்.
இதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை மாநில தர்மபிரஸார் அமைப்பாளர் அழகிரி ஜி பேசினார்கள்.
இந்த சேவையின் நோக்கமே நமது பண்பாடு கலாச்சாரம் இந்த கிராமம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்றும் அதற்கு வாரம் ஒருமுறை சத்சங்கம், மாதம் ஒருமுறை திருவிளக்கு பூஜை போன்ற நல்ல சம்ஸ்காரங்கள் இந்த கிராமத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும் அதன் மூலமாக குடும்ப ப்ரபோதன் எப்படி காப்பாற்றப்படுகிறது பற்றியும் பேசப்பட்டது.
இந்த கிராமத்தின் தையல் பயிற்சி ஆசிரியர் 5 வருடங்களுக்கு முன்னர் கிறிஸ்தவ ஜெப கூட்டத்திற்கு தொடர்ந்து சென்று வந்தவர்.
அவரிடம் பேசி மீண்டும் நமது தாய் மதத்திற்கு அழைத்து வந்தவர் நமது மாவட்ட இணை செயலாளர் திரு ரமேஷ் பிரபு அந்த பெண்மணிக்கு தான் கடந்த 1 தேதி தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
இன்று தையல் பயிற்சி நிலையமாக தொடங்கப்பட்டது.