ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஈரோடு பகுதியில் ஆன்லைன் பட்டா,சிட்டா மாறுதல் தாமதமாவது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.!
நத்தம் நிலங்களுக்கு ஆன்லைன் மூலம் பட்டா மற்றும் சிட்டா சான்றிதழ் பெறுவதில் உள்ள இடையூறுகளை நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ஈரோடு மாநகர் மாவட்டத் தலைவர் டி. திருசெல்வம் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் மாவட்ட தலைவர் ஈ ஆர் ராஜேந்திரன்,விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பி.ஏ.பெரியசாமி,தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை முன்னாள் மாநில துணைத்தலைவர் எம்.ஜவஹர் அலி, மண்டலத் தலைவர்களான ஆர் விஜயபாஸ்கர், எச்.எம்.ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 26/09/2024 காலை 11 மணிக்கு மனு அளித்தனர். சான்றிதழ்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், மக்கள் தங்கள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சொத்துக்களை விற்பதிலும் அல்லது வாங்குவதிலும் பாதிக்கப்படுவதுடன், அரசு உரிய வருவாயைப் பெறுவதில் மறைமுகமாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன், ஈரோடு வட்டாரத் தலைவர் பி ஏ கே மோகன்ராஜ்,மாநகர பொது செயலாளர் இரா கனகராஜன், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை முன்னாள் துணைத் தலைவர் கே என் பாஷா, மாவட்ட செயலாளர் மாமரத்து பாளையம் கோபி, ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சித்தோடு பிரபு, ஈரோடு மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சி மாரிமுத்து, ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி எம் ஞான தீபம், என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, மாவட்ட நிர்வாகிகளான கேமரா செல்வம், ஆர் என் புதூர் பெருமாள் மணி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.