கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி….
200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அசூரில் உள்ள ஸ்ரீ சங்கரா கல்லூரியின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி மகாமகக் குளக்கரையில் இருந்து கல்லூரி முதல்வர் உஷா சேகர் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் இளம் செஞ்சிலுவை சங்கத் துணைச் சேர்மன் ரொசாரியோ திருவேங்கடம் ,மேலாளர் வெங்கட்ராமன் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இப்பேரணி மகாமக குளக்கரையிலிருந்து முக்கிய வழியாக பாலக்கரை வரை சென்றடைந்தது.
இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பி துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து பேரணியாகச் சென்றனர்.