கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கல்லூரி மாணவன் முதல் கோட்டை அமைச்சர் வரை கடந்து வந்த சாமானிய சமத்துபுரத்தில் பிறந்து அரசியல் பயணத்தை துவங்கிய உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் பற்றிய ஓர் செய்தி தொகுப்பு……
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் உள்ள ராஜாங்க நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் கோவி.செழியன் வயது -57, இவருக்கு உமாதேவி என்ற மனைவியும் அபிநயா என்ற மகளும் சபரி செல்வன் என்ற மகனும் உள்ளனர்.
இவரது தந்தையார் கோவிந்தன் திமுகவைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் தந்தையுடன் அரசியலில் முகுந்த ஈடுபாடுடன் இருந்ததால் கோவில் செழியனுக்கு எட்டாவது படிக்கும் போது தினமும் முரசொலி வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது பாடம் புத்தகம் போலவே முரசொலியில் கலைஞரின் கடிதங்களையும் தினந்தோறும் படித்து நன்கு வாசிக்கும் பழக்கத்தை கற்றுக் கொண்டார்.
இவர் கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலை பட்டமும் , சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டமும் படித்தார் பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ், முதுகலை சமூகவியல் ஆகியவற்றை முடித்தார்.
பின்பு சென்னை பல்கலைக்கழகத்தில் திமுக தலைவர்
மு. கருணாநிதியின் பேச்சு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளராகவும், மாணவரணி இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார் .
மேலும்,தமிழக சட்டமன்றத்தின் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் (2011,2016,2021) ஆகிய தேர்தலில் மூன்று முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார் மேலும் தமிழக அரசின் தலைமை கொறடா -வாகவும் பொறுப்பேற்று சிறந்த முறையில் அரசியல் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்.
மக்களிடமும் தொண்டர்களிடமும் கழக நிர்வாகிகளுடன் அன்பாகவும் எளிமையாகவும் மென்மையாகவும் பழகக் கூடியவர்,
இந்த நிலையில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு வழக்கமாக வழங்கும் துறைகளை தாண்டி உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி. செழியன் -க்கு வழங்கி இருப்பது வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளது.
மேலும் பட்டியல் சமுதாய மக்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று திமுக மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்னமும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் விசிக அதிகாரத்தில் பங்கு என்ற குரலை சற்று உயர்த்திய நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த கோவி. செழியனுக்கு கொடுக்கப்பட்ட இடம் திமுக வின் வலிமையான பதிலாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது….
மேலும் அவரது பள்ளி, கல்லூரி பருவ நண்பர்கள் , குடும்பத்தார்கள் பேசுகையில்….,
எப்பொழுதுமே கட்சிக் கழகம் கலைஞர் என முழுமூச்சாக திமுகவை உள்வாங்கி பேச்சு ஆற்றலாலும் , செயல் திறனாலும் மக்களுக்கு செய்யக்கூடிய எளிமையானவர் தான் கோவி .செழியன் ஆவார்,
அவர் உயர்கல்வி அமைச்சராக பதவி வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழகத் துணை முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றியினையும் ,
வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.