மாதவரம் ரவுண்டானா பஸ் நிலையம் அருகில் உள்ள சிஎம்டிஏ லாரி நிறுத்தத்தில் சென்னை சென்டினியல் லயன் சங்கம் சார்பாக இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக லாரி அசோசியேசன் தலைவர் எம். ஜே .எப் .லயன் ஜெயக்குமார் தலைமையேற்று நடத்திய இந்த முகாமில் கண் சிகிச்சை ,பல் சிகிச்சை ,சர்க்கரை அளவு ,மற்றும் ரத்த அழுத்தம் , பொது மருத்துவம் ஆகியவற்றுக்கான சிகிச்சைகளை கே.வி.டி மருத்துவமனையின் மருத்துவகுழுவினர் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள்.

மேலும் நலிவுற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக சீருடை வழங்கப்பட்டது இதில் ஏராளமானோர் ஒரு கலந்து கொண்டு பயனடைந்தனர் .

சென்னை சென்டினியல் லைன் சங்கத்தின் தலைவர் சுரேஷ் , செயலாளர் இளையபாரதி , பொருளாளர் சுரேஷ்நடராஜ் , வட்டாரத் தலைவர் தங்கையா முருகேசன் ,ஸ்ரீகுமார் திருப்பத்தையா , சத்திய நாராயணா, லயன் கண்ணன் உட்பட நிர்வாகிகளும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *