கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம்.
விருத்தாசலம் அருகே உள்ள கட்சி பெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற கூலி தொழிலாளி வேலைக்கு சென்ற இடத்தில் வலிப்பு வந்து அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வந்த போது சரியான முறையில் மருத்துவம் பார்க்காத மருத்துவர் தனது அலட்சியப் போக்கை காட்டியதால் ரமேஷ் உயிர் இழந்தார்.அந்த மருத்துவரை பணியிடம் நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இறந்த ரமேஷ் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் டாக்டர் இ.கே.சுரேஷ் மாநில இளைஞரணி செயலாளர் மற்றும்
மாவட்ட செயலாளர்
கார்த்திகேயன்
மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு அரசு மருத்துவமனை முன்பு உள்ள சேலம் சாலையில்மறியல் செய்தனர்.