திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி சமூகப்பணித்துறை சார்பில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் அரிமா. லயன் ரெத்தினம், கல்லூரி இயக்குனர் முனைவர் துரை ரெத்தினம் அவர்களின் ஆலோசனையின்படியும் கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் அவர்களின் வழிகாட்டலில், துறைத் தலைவர் ரெஜினா அனுமதியுடன் திண்டுக்கல்லில் உள்ள ஒருங்கிணைந்த குடிபோதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் உள்ள குடி போதையில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளும், குடி போதையால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் அதில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அடுத்ததாக போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் ராஜா, முனைவர் கதிரவன், முனைவர் பாலகோமளா பல்வேறு உளவியல் சார்ந்த கருத்துக்களை பேசியும் மாணவர்களை ஒருங்கிணைத்தும் சிறப்பாக வழிநடத்தினர். இந்த விழிப்புணர்வு முகாமில் 40 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு குடி போதைக் எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த உறுதிமொழியினை முதுகலை மாணவி காயத்ரி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.