திருவொற்றியூர் மறைந்த முன்னாள் அமைச்சர் கே. பி. பி. சாமி, எம். எல். ஏ. கே. பி. சங்கர். கவுன்சிலர் கே. பி
சொக்கலிங்கம் ஆகியோரின் தந்தை முன்னாள் கவுன்சிலர் பரசுராமன் 32ஆவது நினைவு நாள் கே. வி. கே. குப்பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி
மு. க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம். எல். ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பரசுராமன் திருவுவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி தையல் எந்திரங்கள், சேலை, பிரியாணி, அரிசி உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினர். நிகழ்ச்சியில். மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆர். ஜெயராமன், எம்
எஸ். திரவியம், நிர்வாகிகள் ராமநாதன், பத்மநாபன், ஆர். டி. மதன் குமார், எஸ். டி. சங்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்