நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்…
நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் விவசாய சங்க மாநில துணை தலைவர் சுப்பிரமணியன் கலந்துக்கொண்டு பேசியபோது ; கடந்த ஆண்டு போதிய காவிரி நீர் கிடைக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனம் மற்றும் வேளாண்துறை, வருவாய்த்துறை துறையினர் யானை பசிக்கு சோளப்பொறி போட்டது போல் மாவட்டத்தில் 193 ஊராட்சிகளில் வெறும் 34 ஊராட்சிகளுக்கு மட்டும் பயிர்காப்பீடு வழங்கி வருகிறது.
மேலும் அனைத்து ஊராட்சிகளுக்கும் பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என பேசினார்.இதில் சிபிஎம் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், விவசாய தொழிலாளர் சங்ச மாவட்ட தலைவர் வேணு உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.