பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தாமரைக் குளம் பேரூராட்சி வளர்ந்து வரும் பேரூராட்சியான இந்த பேரூராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் கூட்டம் அதன் தலைவர் ச. பால்பாண்டி தலைமையில் செயல் அலுவலர் ஆளவந்தார் முன்னிலையில் மன்ற கூட்டம் மிகச் சிறப்பாக அமைதியாக கூட்டம் நடந்து முடிந்தது
இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் வளர்ச்சி திட்ட பணிகள் தடையில்லாமல் பொதுமக்களுக்கு தேவையான முக்கியமான குடிநீர் வழங்கல் உள்பட 13 தீர்மானங்கள் அனைத்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது
மேலும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தகுந்த பதில் அளித்த பேரூராட்சி அதிகாரிகள் உறுப்பினர்கள் திருப்தி படும்படி உடனுக்குடன் பதில் அளித்தார்கள் இந்த கூட்டத்தில் பணி நியமன குழு தலைவர் பாலமணி பழனி முருகன் உள்பட பேரூராட்சி 15 வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாத்திமா நன்றி கூறினார்