திருநெல்வேலி கூடன்குளம் காந்திநகரில் சந்தனமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இங்கு அனைத்து மக்களும் வழிபட்டு செல்வது வழக்கம் இந்நிலையில் வழிப்பாட்டு உரிமையில் பட்டியல் இன மக்களுக்கு எதிராகவும், உயர்நீதிமன்ற உத்தரவினை மீறியதாகவும் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்படும் கூடன்குளம் காவல்துறையினர் மற்றும் ராதாபுரம் வட்டாட்சியரை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் A.K.நெல்சன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது