கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.

பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் சேர்ந்த சிவன் மகன் மாரியப்பன்53. தேனி மாவட்டம் தொப்பம்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் கருமலை50. உத்தமபாளையம் சேர்ந்த மாரி மகன் மணிவண்ணன்40. பற்றாயன் மகன் முருகன்42. நண்பர்கள் ஆன மேற்கூறிய நான்கு பேரும் தங்க பிஸ்கட் வாங்கி விற்பனை செய்ய திட்டமிட்டனர்.

இதற்காக ஆன்லைனில் ஒரு பிஸ்கட் ஒன்று 500 ரூபாய் என்ற கணக்கில், ஐந்து பிஸ்கட்டுகள் வாங்கி, அவற்றை ஒரிஜினல் தங்க பிஸ்கட் என்று கூறி பல லட்சம் ரூபாய் க்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டனர். இதற்காக ஈரோட்டைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த அர்ஜுன் ஆகிய புரோக்கர்களை நாடினர் பல்லடம் அடுத்த மகாலட்சுமி நகரில் வைத்து தங்க பிஸ்கட்டுகளை கைமாற்றலாம் என திட்டமிட்டனர்

புரோக்கர் சுரேஷ் மூலம் இந்த தகவல் இவரது நண்பரான நாமக்கல் சேர்ந்த பிரபல ரவுடி காசிராஜ் 34 என்பவருக்கு தெரிய வருகிறது இதை எடுத்து காசிராஜ் அந்த தங்க பிஸ்கட்டுகளை பறித்துச் செல்ல திட்டம் தீட்டினார் காசி ராஜ் மற்றும் இவரது கூட்டாளிகள் விஜயகுமார் கோபிநாத் கிருஷ்ணன் சுரேஷ் ரகு மணிராஜ் மற்றும் மணி ஆகிய எட்டு பேர் கொண்ட கும்பல் கைமாறும் தங்க பிஸ்கட்டுகளை பறித்து செல்ல திட்டமிட்டு தயாராகினர்

இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தெரியவர மகாலட்சுமி நகரில் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர் மேலும் இவர்களிடம் இருந்து ஸ்கார்பியோ கார் இரண்டு கட்டிகள் ஆக்கி பேட் மற்றும் ஐந்து தங்க பிஸ்கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவத்தில் தொடர்புடைய 14 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். போலி தங்க பிஸ்கட்டுகளை விற்பனை செய்ய முயன்றது மற்றும் இன்றி அதை பறித்துச் செல்ல திட்டமிட்ட பிரபல ரவுடி உட்பட 14 பேரும் கைது செய்யப்பட்ட சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *