SSA பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சம்பளம் விரைவில் வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்:
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வேண்டுகோள் :
எஸ்எஸ்ஏ திட்டத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதம் சம்பளம் உடனே வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மத்திய அரசின் எஸ்எஸ்ஏ திட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் மற்றும் பணியாளர்களும் நீண்ட காலமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றார்கள்.
மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற அடிப்படையில் நிதியை பங்கிட்டு இந்த திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பளத்தை நம்பி 15 ஆயிரம் பேர் வாழ்க்கை உள்ளது.
எனவே முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு எஸ்எஸ்ஏ திட்டத்தில் பணிபுரியும் அனைவருக்கும் செப்டம்பர் மாதம் சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203