வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக மாவட்ட தலைவர் குலாம்மைதீன் தலைமையில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 49-வது நினைவு நாளும்,லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் 120-வது பிறந்த நாளும் ஆக முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் தலைமை வகித்தார், நகரத் தலைவர் அகமது மைதீன் முன்னிலை வகித்தார். மூன்று தலைவரின் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் வட்டார சேவா தள தலைவர் கே. என். ஆர். இளங்கோவன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருள் மற்றும் இனிப்பு வழங்கி மகாத்மா காந்தியடிகளின் காந்திய சிந்தனை,@ அமைதி, மத நல்லிணக்கம்,பெருந்தலைவர் காமராஜரின் கல்வி சிந்தனை ஆகியவற்றை எடுத்து
கூறினார். முடிவில் நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.