செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம்
கயப்பாக்கம் ஊராட்சியில் விவசாய நிலத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் காந்தி ஜெயந்தி யெட்டி தொழிலதிபர் பன்னீர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தார்.

ஈஷா யோக மையத்தின் ஓர்அங்கமான காவேரி கூக்குரல் இயக்கம், தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க மரங்கள் நடும் பணியை மேற்கொண்டு வருகிறது. காந்தி ஜெயந்தியை சிறப்பிக்கும் வகையில் அக்டோபர் 2ம் தேதி அன்று, விவசாயிகளின் பங்களிப்போடு தமிழகம் முழுவதும் உள்ள 86 விவசாய நிலங்களில், 653 ஏக்கர் நிலப்பரப்பில், 1,82,547 மரக்கன்றுகள் நடப்பட்டது.

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம், விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயம் செய்ய ஊக்குவித்து வருகிறது. தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற, பலன் தரக்கூடிய விலைமதிப்பு மிக்க மரங்களை வரப்பு ஓரங்களில் அல்லது நிலம் முழுவதும் நடவு செய்யலாம். மரங்களை 20 ஆண்டுகள் வரை முறையாக பராமரிப்பதன் மூலம் விவசாயிகள் பல மடங்கு வருமானம் பெறமுடியும்.

விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களை சாகுபடி செய்வது, பசுமைப் பரப்பை அதிகரிக்க ஒரு எளிய வழிமுறையாகும். மேலும் நிலத்தில் இருந்து வருடந்தோறும் தொடர் வருமானம் பெறும் வகையில் ஊடுபயிர்கள் சாகுபடி செய்யலாம், மேலும் ஜாதிக்காய், மிளகு, திப்பிலி, பட்டை போன்ற நறுமணப் பயிர்களையும் சாகுபடி செய்யலாம்.

இதற்கான ஆலோசனைகளையும் காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.விவசாயிகளுக்கு தரமான நாற்றுகளை வழங்குவதற்காக 50க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகளை காவேரி கூக்குரல் நடத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு டிம்பர் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் இதுவரை 11 கோடி மரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 1.12 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் 1.21 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 54.95 லட்சம் மரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஈஷா நாற்றுப் பண்ணைகளில் டிம்பர் மரங்கள் மட்டுமல்லாது, பொது இடங்களில் நடுவதற்கு தேவையான புளி, பாதாம், இயல்வாகை, பூவரசு, இலைபொரசு, மந்தாரை, சரக்கொன்றை, மகிழம் போன்ற நிழல் மரங்கள் மற்றும் மாதுளை, கொய்யா, நெல்லி போன்ற நாட்டுரகப் பழமரங்களும் வழங்கப்படுகிறது. மேலும்
இதன் தொடர்ச்சியாக சித்தாமூர் ஒன்றியம் செய்யூர்
தாலுகாவுக்குட்பட்ட கயப்பாக்கம் ஊராட்சியில் விவசாயி கே.சி.ராஜன் நிலத்தில் 2200 மரக்கன்றுகளை
நடவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சிகளையும் காவேரி கூக்குரல் நடத்தி வருகிறது. வரும் ஜனவரி 5ம் தேதி “மரங்களுக்கு இடையே விவசாயம்! மகத்தான வருமானம்!” என்ற ஊடுபயிர் சாகுபடி குறித்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளது. இக்கருந்தரங்கில் முன்னோடி மர விவசாயிகளும், விஞ்ஞானிகளும் பங்கேற்று பேச உள்ளார்கள். பயிற்சியில் பங்கேற்க 94425 90081 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். மரம் சார்ந்த விவசாயம் குறித்து கூடுதல் தகவல்கள் பெறவும், குறைந்த விலையில் மரக்கன்றுகள் பெறவும் 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காவேரி கூக்குரல் இயக்கம் தகவல் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *