செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள
படாளம் வேடந்தாங்கல் சாலையில் உள்ள திருமலை வையாவூரில் அமைந்துள்ள இராமானுஜ யோகவனம் மற்றும் அமரதபுரி ஸ்ரீநிவாஸ பெருமாள் கோவிலின் ஸ்தாபகர் பகவான் ஸ்ரீ சீத்தாராம் சுவாமிகள் தனது
82-வது வயதில் செவ்வாய்க்கிழமை ஆச்சாரியின் திருவடி அடைந்தார்.
பகவான் ஸ்ரீ சீத்தாராம் சுவாமிகள் 26-02-1942 அன்று இராமநாதபுரத்தில் பிறந்தார். 1963 -ம் ஆண்டு சுவாமிகளை அவருடைய மூத்த தமையன் பெருமாளுக்கு தாரைவார்த்து கொடுத்தார்.
காஞ்சி மகானை தன் குருவாக ஏற்று மகா பெரியவரியின் வழிகாட்டுதலின்படி சாதி மத பேதங்கள் இன்றி சேவை செய்து வந்தார்.
உப்பிலியப்பன் மற்றும் பெருமாளின் அருளாசியுடன் 1973 -ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இன்று வரை 687 மாதம் தொடர்ந்து திருவோண தீபம் எடுத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். 1976 -ம் ஆண்டு சென்னை மாநகரில் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ நிகேதனத்தை நிறுவி இன்று வரை பல தர்மகாரியங்களை செய்து வந்தார். கடந்த 27 வருடமாக திருமலை வையாவூர் அலமேலு மங்கை தாய் உடனுறையும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் சன்னதியில் தொடங்கிய பாதயாத்திரை அதன் தொடர்ச்சியாக அமரபுரியிலும் ஒவ்வொரு வருடம் புரட்டாசி மாதம் 3-ம் செவ்வாய் கிழமை தொடங்கி மூன்றாவது சனிக்கிழமை நிறைவு பெறும்.
பெருமாளுடன் உபய நாச்சியார்கள்இ சிறிய திருவடி
என 900 பக்தர்களுடன் பாதயாத்திரையாக
வந்து அங்கு உறையும் அமரபுரிவாசனுக்கு திருக்குடைகள் சமர்ப்பிப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் தை 3 -ம் வெள்ளி 1008 விளக்கு பூஜை மற்றும் பெருமாள் இரதசப்த வாகன தரிசனம் நடத்திவந்தார்.
கோசாலை இலவச மருத்துவ முகாம், அன்னதானம் மற்றும் தொழுநோயாளிகளுக்கு இனிப்பு புத்தாடை வழங்குதல் போன்ற சமூக சேவை ஆற்றினார்.
பெருமாளின் அருளால் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த பகவான் ஸ்ரீ சீத்தாராம் சுவாமிகளின் பிருந்தாவன பிரவேசம் நேற்று நடைபெற்றது.
இதில் அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு பகவான் ஆசி பெற்று சென்றனர்.