மும்பை – திருநெல்வேலி தீபாவளி சிறப்பு ரயில் ( வழி – பன்வெல், மடகாவ் (கோவா) மங்களூர், எர்ணாகுளம், கொல்லம், புனலூர், செங்கோட்டை, அம்பை, சேரன்மகாதேவி ) ரயிலை பரிந்துரை ( Proposal ) செய்து மத்திய ரயில்வே ,தென்னக ரயில்வே அக்டோபர் 3 இல் அனுப்பியது இதற்கு ( concurrence )ஒப்புதல் அளித்து தென்னக ரயில்வே அக்டோபர் 17 அன்று மத்திய ரயில்வேக்கு அனுப்பியது . Timetable சேர்த்து அனுப்பியதாக தகவல்.
தற்போது மத்திய ரயில்வே இந்த ஒப்புதலை ஏற்றுக்கொண்டு சிறப்பு ரயிலை இயக்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அக்டோபர் 31 இல் தீபாவளி வருவதால் குறைவான நாட்களை இருப்பதால் ,மற்ற ரயில்களில் டிக்கெட் கிடைப்பதில் காத்திருப்பு பட்டியல் அதிகரித்து வருகிறது சிறப்பு ரயில்கள் அறிவிப்பை உடனே அறிவித்தால் மட்டுமே மக்களிடம் செய்திகள் சென்று மக்கள் பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்வார்கள். கடந்த மே 2023 ஆண்டு மும்பை -தூத்துக்குடிக்கான சிறப்பு ரயில் அறிவிப்பு கடைசி மூன்று நாட்டில் அறிவிக்கப்பட்டு
மக்கள் அதிகசிரமத்துக்கு உள்ளார்கள் குறிப்பாக பயண டிக்கெட் விலை அதிகம், குறிப்பிட்ட நேரத்தில் ரயில் புறப்படவில்லை ,நள்ளிரவில் தூத்துக்குடிக்கு சென்றது, தென்மாவட்டம் கிராமங்கள் உள்ளடக்கிய பகுதி,தனியார் வாகனம் வாடகை அதிகம், இரவு
ரயில்நிலையங்களில் தங்கியது, அரசு போக்குவரத்தேயே அதிகமான மக்கள் பயன்ப்படுத்துவது இயல்பு இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு விரைவில் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான முதல் அறிவிப்பு திட்டத்தை மத்திய ரயில்வே வெளியிடவேண்டும். அதைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே மறு அறிவிப்பை வெளியிடப்பட்டு சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு இந்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .மத்திய ரயில்வே அதிகாரி தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர், முதன்மை இயக்குவதால் மேலாளர் மற்றும் கூடுதல் பொது மேலாளரிடம் ஆகியோரிடத்தில் மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் நேரில் மனுவை அளித்தார்.
மராட்டிய மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டதால் வேலைப்பளு அதிகமாகியுள்ளதாகவும் இருப்பினும் சிறப்பு ரயில் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கிறோம் என அதிகாரிகள் ஸ்ரீதர் தமிழனிடம் தெரிவித்தார்கள் மேலும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் டெல்லியில் உள்ள ரயில்வே போர்டு சேர்மன் சந்தித்து மனு அளிக்க முயற்சிக்கிறார் கூடுதலாக
விரைவில் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க மத்திய ரயில்வே மற்றும் தென்னக ரயில்வே பொதுமேலாளர்க்கு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஷ்
மற்றும் மும்பை சீயோன் கோலிவாடா சட்டமன்ற
உறுப்பினர் தமிழ் செல்வன் ஆகியோர் மனு அனுப்பியுள்ளனர் இதுவரை நான்கு முறை மனு வழங்கப்பட்டுள்ளது .புதிய வழித்தடத்தில், குறைவான நேரத்தில் பயணிக்க மும்பை தமிழர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கடந்த நான்கு மாதங்களாக புதிய வழித்தடத்தை அதிகாரிகளிடம் விளக்கி ஏற்க வைத்து, மத்திய ரயில்வேயிடம் பரிந்துரை பெற்று, தென்னக ரயில்வேயிடம் ஒப்புதல் பெற்று, நமது கடமையை செய்து விட்டோம். தாமதமாக இந்த பணி முடிந்தாலும் மத்திய ரயில்வே மற்றும் தென்னக ரயில்வே அதிகாரிகள் கோரிக்கைகளை கேட்டதுடன் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கினார்கள். தற்போது சிறப்பு ரயில் இயக்க அறிவிப்பை வெளியிட ரயில்வே துறையை கையிலே இருக்கிறது என ஸ்ரீதர் தமிழன் தெரிவித்துள்ளார்.