விருதுநகர் மாவட்டம் முழுவதும் நெல், பருத்தி, கரும்புக்கு அடுத்தபடியாக வறட்சியை தாங்கி வளரக்கூடிய மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக மக்காச்சோளம் ராஜபாளையம் மற்றும் கிழக்கு, தெற்கு, வடக்கு பகுதிகளில் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது நடப்பு ஆண்டிற்கு 5000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரும்பு சாகுபடியாளர்கள் சரியான கரும்பு அறவை ஆலைகள் இல்லாததால் முன்பதிவு செய்ய இயலாத நிலையில் மக்காச்சோளம் பயிரில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கரும்புக்கு மாற்றுப் பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆண்டில் 5000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரும்பு சாகுபடி பயிர் பாதிக்கும் கீழாக குறைந்துள்ளதும் வருந்தத்தக்கதாகும். இந்நிலையில் செலவுகள் குறைவாகவும், வருமானம் அதிகமாகவும் உள்ள இந்த மக்காச்சோள பெயர் தற்போது அதிகமான விலைக்கு வாங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது வரை மக்காச்சோளம் குறைந்த அளவில் மட்டுமே செலவாகும்.
இதர தண்ணீர் பாய்ச்சுதல், உரமிடுதல், மருந்து தெளித்தல் போன்றவைகளுக்கு மிக மிக குறைந்த அளவே செலவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் மக்காச்சோள பயிர் சாகுபடியில் அதிகமான தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அனைத்துமே இந்திரமயமாக்கப்பட்டு விட்ட நிலையில் அறுவடைக்கு தயாரான மக்காச்சோள பயிர்களை அறுவடை இயந்திரம் மூலமாகவே அறுவடை செய்து எந்திரங்கள் மூலமாகவே தனியாக பிரித்து மக்காச்சோள விதைகளை சேகரித்து விற்பனை செய்து வருவது பாராட்டத்தக்கதாகும்.
இந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக அதிக அளவு மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருவது பாராட்டத்தக்கதாகும்.