வடமதுரை அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது, 2 சேவல்கள், ரூ.2 ஆயிரம் பணம் பறிமுதல்

திண்டுக்கல், வடமதுரை அருகே எத்தலப்பநாயக்கன்பட்டி, சங்கிலி கரடு பகுதியில் ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தது வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் ரஞ்சித், வெங்கடேஷ், பாப்பன், ஜீவா, மெய்யப்பன் என்பது தெரியவந்தது.வடமதுரை போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 2 சேவல்கள், பணம் ரூ.2000 ஆகியவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *