வலங்கைமான் ஒன்றியம் சாரநத்தம் கிளையில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக மண் பலகாரம் தின்னும் நூதன போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் சாரநத்தம் கிளையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக மண் பலகாரம் தின்னும் நூதன போராட்டம் நடைபெற்றது.
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வாங்கக்கூடிய அத்தியவசிய பொருட்களின் விலையை உயர்த்தி இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அதேபோல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு பொருட்களை விற்கும் இடைத்தரகர்களை கட்டுப்படுத்தவும், கடுமையான விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தீபாவளி பண்டிகை காலத்தை ஒட்டி குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்கிடவும் மாநில அரசை வலியுறுத்தி மண் பலகாரம் தின்னும் நூதன போராட்டம் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சந்ரோதயம் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மாதர் சங்க மாவட்ட பொருளாளர் சுமதி, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் இராதா, ஒன்றிய செயலாளர் சண்முகம், சாரநத்தம் கிளை செயலாளர் ரகுபதி உள்ளிட்ட தோழர்கள், மாதர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.