தூய்மை பணியாளர்கள் 1500 பேருக்கு மேயர் ஜெகன் தன் சொந்த செலவில் சேலை பேண்ட் சர்ட் ஸ்வீட் பார்க் வழங்கினார்
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தன்னுடைய சொந்த செலவில் தீபாவளி முன்னிட்டு சேலை பேண்ட் சர்ட் ஸ்வீட் வழங்க முடிவு செய்தார் அதன் அடிப்படையில் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பெண் தூய்மை பணியாளர்களுக்கு சேலை ஸ்வீட் பாக்ஸ் ஆண் பணியாளர்களுக்கு பேண்ட் சர்ட் ஸ்வீட் பாக்ஸ் ஆகியவற்றை கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து தூய்மை பணியாளர்களுக்கு மேயர் ஜெகன் வழங்கினார்
அதன் பின்பு மேற்கு மண்டலத்தில் வைத்து மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சேலை பேண்ட் சர்ட் ஸ்வீட் பாக்ஸ் மாநகராட்சி மேயர் ஜெகன் வழங்கினார்
தூத்துக்குடி மாநகராட்சியில் 1217 தூய்மை பணியாளர்களும் வாகன ஓட்டுனர்கள் உள்பட மொத்தம் ஆயிரத்து 500 பேருக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் தன் சொந்த செலவில் தீபாவளி போனஸ் ஆக வழங்கியுள்ளார்
மேலும் தூய்மை பணியாளர்களிடம் பெயர் ஜெகன் பேசுகையில் உங்களுடைய பிரச்சனையை எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து பேசலாம் உங்களுடைய உரிமைகள் ஒருபோதும் பறி போகாது கடந்த வாரம் நீங்கள் வேலை நிறுத்தம் செய்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே உணவு அருந்தாமல் இருந்தபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் என்னிடம் நீங்கள் நேரில் கூறலாம் என்று மேய ஜெகன் கூறினார்
நிகழ்ச்சியில் துணை ஆணையர் ராஜாராம் மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத் ராஜா மண்டல உதவி ஆணையர் வெங்கடேசன் மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்