தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் புத்தக கண்காட்சி: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு )திரு.M.தாண்டவன், B.L., அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைத்து புத்தக கண்காட்சி நடைபெற்றது.
மேற்படி புத்தக கண்காட்சியில் மாவட்ட நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்கள். முன்னதாக முதன்மை மாவட்ட நீதிபதி திரு. M.தாண்டவன்,B. L. அவர்கள் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
மேற்படி புத்தக கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / முதுநிலை உரிமையியல் நீதிபதி திருமதி. C. கலையரசி ரீனா, M.L.,, இளநிலை நிர்வாக உதவியாளர்கள் திரு.S. அருள்மணிராஜ் மற்றும் திருமதி. P. இசக்கியம்மாள் ஆகியோர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.