குடவாசல் அருகே உள்ள கண்டிரமாணிக்கம் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கண்டிரமாணிக்கம் ஊராட்சியில் திருவாரூர் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கண்டிர மாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் அன்னதாசன், வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் ஆகியோர் தங்களது துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினர். தோட்டக்கலைத் துறை சார்பில் சிவமணி மற்றும் மோகன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசு மூலம் தோட்டக்கலைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து கூறினார். அதேபோன்று பட்டு வளர்ச்சி துறை சார்பில் ராகினி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் காயத்திரி ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினர்.