தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அரசின் பள்ளி மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ முகாம் நடை பெற்றது.

                                 முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கணபதி  சீத்தாராமன் மற்றும் யாழினி  ஆகியோர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை  செவிலியர் உமாமகேஸ்வரி ,  மருந்தாளுனர்கள் சிவகுமார்,கனிமொழி ஆகியோர் செய்து இருந்தனர்.

                     மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.மேலும் சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனர்.

                         மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்களின் தீவிரம் குறித்து எடுத்த சொல்லப்பட்டது.பொதுவாக பல் சம்பந்தமான நோய்கள்,விட்டமின் குறைபாடு தொடர்பான நோய்கள்,தைராய்டு தொடர்பான தகவல்கள் அவற்றை எவ்வாறு சிறு வயது முதலே சரி செய்வது,நோய் வருமுன் காப்பது என்பன போன்ற பல்வேறு உடல் நோய்கள் தொடர்பான தகவல்கள் எடுத்து சொல்லபட்டது.முகாமின் நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர்  நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *