கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கருவளர்ச்சேரி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இன்று தீபாவளி கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது .
கும்பகோணம் சீதாலட்சுமி அறக்கட்டளைகள் தலைவர் லயன் பழனியப்பன் தலைமை தாங்கினார்.
கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்க சாசன தலைவர்
லயன் ச. இரவி முன்னிலை வகித்தார்.
சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர் லயன் அறிவுடைநம்பி ,ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்
பள்ளி மாணவ மாணவிகள்,பழைய மாணவர்கள் ,ஆகியோர்
கலைநிகழ்ச்சி நடைபெற்றது ,கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் , சீதாலட்சுமி அறக்கட்டளைகள் ஆகியோர் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தம் புதிய ஆடைகளும், இனிப்புகளும் ,லயன் பழனியப்பன் , லயன் இரவி ஆகியோர் வழங்கினார்கள்.நிறைவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய மேரி நன்றி கூறினார்.