ஜிடிஎன் கல்லூரியின் சுற்றுச் சூழல் கழகம் சார்பில் திண்டுக்கல் வெள்ளோடு கிராமத்தில் இயற்கையை பாதுகாக்கும் விதமாக,கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் அரிமா. லயன் ரெத்தினம், கல்லூரி இயக்குனர் முனைவர் துரை ரெத்தினம் அவர்களின் வழிகாட்டுதலில், கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் அவர்களின் ஆலோசனையில், சுமார் 100க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடும் விழா மற்றும் மழைக் காலங்களில் இடி, மின்னல் இடற்பாடுகளில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சுற்றுச்சூழல் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா நிகழ்வில் கலந்து கொண்டவர்களை வரவேற்றார். சுற்றுச்சூழல் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி. ரவிச்சந்திரன், பனை விதைகள் நடுதலின் சிறப்புகளையும், மழைக் காலங்களில் இடி, மின்னல் போன்ற இடற்பாடுகளில் இருந்து மனித உயிர்களையும், கால்நடைகளையும் எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது பற்றி சிறப்பான கருத்துக்களை கிராம மக்கள் முன்னிலையில் எடுத்துரைதார்.
அடுத்ததாக கிராம பகுதியில் பனை விதைகள் நட்டு வைத்து மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வெள்ளோடு கிராம பஞ்சாயத்து தலைவர் கலந்து கொண்டு வாழ்த்தி நிகழ்வினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்குகொண்டு பயன் பெற்றனர்.
இறுதியாக சுற்றுச் சூழல் கழக இணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. அருண் அருண் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை முனைவர் கதிரவன், முனைவர் ஸ்டீபென் துரை அவர்கள் மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக நடைபெற நடைபெற துணை நின்றார்.