கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிப்பட்டினத்தில் அக்டோபர் மாதம் 18-ம் தேதி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் நகர காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சார்பில் கிழக்கு மாவட்ட முன்னாள் மாவட்ட தலைவரும், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட பொருளாளர் உமர் பாஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களான, 1,கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தாங்கிரஸ் தலைவர் நியமிக்கும் வரை கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்கள் மாவட்ட பொறுப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும், 2,வருகின்ற தமிழக உள்ளாட்சி தேர்தலையொட்டி மகாங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் தலைமையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ளாட்சி பணிகள் குறித்த ஆயத்த பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும், 3, காவேரிப்பட்டினத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் பூட்டி நிலையில் உள்ள காந்திஜி நூற்றாண்டு நினைவு மண்டபத்தை புதுப்பித்து,
புது பொலிவுடன் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர கோபிநாத் அவர்கள் காங்கிரஸ் கட்சி பணிக்காக திறந்து வைக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இந்த தீர்மானம் குறித்த நகலை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் மாவட்டத் தலைவரும் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன் அவர்கள் நேற்று முன்தினம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை மரியாதை நிபர்த்தமாக நேரில் சந்தித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கை மனுவினை வழங்கினார். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.