தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்
தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பின்னர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சகோதரர்கள் சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்,எம். எல்.ஏ.க்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக புறப்பட்டார்.