TNPSC குரூப்4 பணிகளுக்கான தேர்வினை கடந்த 9/6/2024 நடத்தியது..6244 பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டு இப்போது இதன் பணியிடங்கள் பிற்சேர்க்கையாக 9500 வரை உயரந்துள்ளது. தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 28/10/2024 அன்று குரூப்4 தேர்வுக்கான முடிவுகளை TNPSC மிக குறைந்த நாட்களில் வெளியிட்டு சாதனை புரிந்தது. தீபாவளி பரிசாக தேர்வர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே!. அதே போல் தேர்வர்களின் மொத்த தரம்( over all rank) மற்றும் இட ஒதுக்கீட்டு( communal rank) தரம் என தெளிவாக வெளியிட்டுள்ளது..
அதுமட்டுமின்றி சில காலியிடங்கள் அதிகரிக்கபட்டுள்ள நிலையில் EO Grade 4 பணியிடங்கள் 30 குரூப்4 பணிகளுடன் சேர்க்க பட்டுள்ளது. தீபாவளி அதிர்ச்சியாகவும் தேர்வர்கள் பார்க்கின்றனர்.
அதுமட்டுமின்றி வருங்காலத்தில் EO கிரேடு 4 பணிக்கு தனித்தேர்வு ரத்தா? என்ற ஐயம் தேர்வர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. EO Grade4 தேர்வுக்கு தனி பாடம் ,தனித்தேர்வாக முன்பு நடத்தப்பட்டது..
இதே போல் EO Grade 3 தேர்வின் நிலை என்ன என்பதையும் தேர்வர்கள் அறிய ஆசைபடுகின்றனர். இந்த பணிகள் குரூ2 பணிகளுடன் இணைக்க படுமா? தேர்வாணையம் விளக்கம் அளித்தால் சிறப்பு.
இது குறித்த விளக்கத்தை தேர்வர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என ஆயக்குடி மரத்தடிமையம் சார்பில் வேண்டுகிறோம்.